Ramzan Wishes by TTV Dinakaran
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ விடுத்துள்ள வாழ்த்து செய்தி:
ஈகைத்திருநாளான ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அன்புக்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தி, ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுத்து இன்புற்று, இறைவனை வணங்கி இஸ்லாமிய சகோதர – சகோதரிகள் ரமலானைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நன்னாளில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் இல்லாமல் அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன். உலக அரங்கில் தனித்துவமுடன் திகழும் இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும்.
நபி பெருமகனார் போதித்த அன்பு, ஈகை, மனித நேயம், கோபம் தவிர்த்தல் போன்ற நற்பண்புகளின் வழியாக அன்பே உருவான மனித சமுதாயத்தை அமைத்திட புனித ரமலான் நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம். மனம் நிறைந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள், என தெரிவித்துள்ளார்.