Ration Store-related faults and notify the January 26 Gramma sabha meeting of the village; Namakkal Collector
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள தகவல்:
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 919 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவுப்படி வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் சமூக தணிக்கைக்கு வைக்கப்பட வேண்டும்.
முன்னுரிமை ரேசன் கார்டுதாரர்கள் பட்டியல்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
எனவே, பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ரேசன் கடைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் கிராம சபை கூட்டத்தின் மூலம் மாவட்ட குறைதீர் அலுவலரிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.