Re-examination for students who cannot write Plus 2 Tamil subject exam: Minister Udayanidhi Information!

தமிழகத்தில் காய்ச்சலால், பிளஸ் 2 தமிழ் பாடத்தேர்வினை எழுதாத மாணவ, மாணவிகளுக்காக மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பேருந்து நிறுத்தம், மற்றும் புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து குன்னம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான நூலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கிருந்த குறிப்பேட்டில் தான் கலைஞர் படிப்பகத்தை திறந்து வைத்தது பெருமை, மகிழ்ச்சி என்றும், அமைச்சர் சிவசங்கரின் பணி தொடர வாழ்த்துக்கள் எனவும் எழுதி கையெழுத்திட்டார்.

பின்னர், அமைச்சர் உதயநிதி நிருபர்களிடம் கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது வருகிறது. இதில் தமிழ் பாடத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசு தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் மறுத்தேர்வு நடத்தி தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும். அதற்கான நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மேற்கொள்வார்.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் பத்தாண்டுகளாக அதிமுக அரசு பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரியை அமைக்காமல் அதை கிடப்பில் போட்டுவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகி மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கும். பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் சிந்தடிக் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி, ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக திறப்பு விழாக்களில், அமைச்சர் உதயநிதியுடன் சிதம்பரம் தொகுதி எம்.பியும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பிரபாகரன், கா.சொ.க.கண்ணன்,

கலெக்டர் கற்பகம், திமுக மாவட்ட செயலாளர் குன்னம். சி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல். ஏ ராஜ்குமார், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.ராஜேந்திரன், மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.ந.பெருநற்கிள்ளி, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ந.ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்தமிழ் செல்வி மதியழகன், ஒன்றிய கழகச்செயலாளர்கள் சி.ராஜேந்திரன், தி.மதியழகன், பூ.செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர். முத்தரசன், குன்னம் ஊராட்சி தலைவர் தனலட்சுமி மதியழகன், குன்னம் ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!