Reconciliation Day Pledge, in Perambalur, Accepted by Government Employees Collector Led!

முன்னாள் பாரதப்பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20 ஆம் நாள் ஆண்டுதோறும் நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் இன்று, நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்க தமிழக அரசு அறிவுறுத்தியதன் படி பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்போது, “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கின்றேன்” என்ற நல்லிணக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி எடுத்தனர். டி.ஆர்.ஓ., அங்கையற்கண்ணி, சப்-கலெக்டர் நிறைமதி, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!