Recruitment of Social Welfare Members to Perambalur District Youth Justice Committee: Eligible candidates can apply; Collector Info!
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) இயக்குநர், சமூகப் பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!