Reddiar community should be added to backward list! Request to Minister Rajakannappan!

தமிழ்நாடு சட்ட சபையில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கண்ணப்பன், ஹோட்டல்கள் வைத்து ரெட்டியார் சமூகம் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு பெரம்பலூர், விளாத்திகுளம், கடலூர், விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ரெட்டியார் சமூகத்தை சங்கங்கள் எடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும், ரெட்டியார் சமூகத்தில், அதிகளவு விவசாயம், மற்றும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி என பல தொழில்களை செய்து வருகின்றனர். மேலும், ஒரு சிலரே ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். அவர்களும் பெரும் கடன் சுமையுடன் நடத்தி வருகின்றனர். அதோடு, ஹோட்டல் தொழிலில் மனித சக்தி அதிகம் தேவை என்பதால், தற்போது நடத்தி வந்த ஒரு சிலரும் விட்டு வேறு வேலைகளுக்கு சென்றுவிட்ட நிலையில், பல தனியார் வேலைக்கு சென்று சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, ஒரு சில ஊர்களில் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பலர் இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமலும், வசதி வாய்ப்பு ஏற்றத் தாழ்வுகளாலும் சொந்த சமூகத்தை பெண் கொடுக்காமல் புறக்கணிப்பு செய்வதால், ஒரு சமூகத்திற்குள் நவீன தீண்டாமைக்கு ஆட்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பபட்ட நலத்துறை கண்ணப்பன், பொருளாதார ரீதியாக பின்தங்கி சிரமம்படும் ரெட்டியார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரீருவர் வசதி வாழ்வதை பார்த்து ஒட்டு சமூகத்தை தவறாக கணிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். அந்த சமூகத்தை சேர்ந்த பலர் கல்வி, மருத்துவம், இருப்பிடம் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியத்தை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளாதவும் தெரிவிக்ககின்றனர். தெலுங்கானா, ஆந்திராவை போன்று ரெட்டியார் சமூகத்தையும் பிற்படுத்தபட்டியலிலோ, அல்லது சிறப்பு இட ஒதுக்கீடோ செய்து வேலைவாய்ப்பில், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!