Rehabilitation for human waste disposal workers: Perambalur Collector!

Photo Credit : Perambalur.nic.in

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணி செய்யும் தொழிலாளர்களை கண்டறிந்து கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டம் (Prohibitionof Employment as Manual Scavengers and their Rehabilitation Act 2013) முறையாக அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் இந்திய அரசின் தூய்மை பணியாளர்களுக்கான (SAFAI Karamacharis) தேசிய ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் நாளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.

தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை தொழில் செய்வோர்களிடம் தல விசாரணை, கலந்துரையாடல், குறைகேட்பு நடத்தப்படவுள்ளதால், பெரம்பலூர் மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை தங்களது குறைகளை இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம், என கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!