Relief items for Essanai & Keelakarai panchayat employees, President Satya Pannirselvam presented.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா தடுப்பு நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு, கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற செய்தல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதுடன், நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறது. கிராம ஊராட்சிகளிலும், தேவையான முன்னெச்சரிக்கை பணிகளும் நடந்து வருகிறது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எசனை மற்றும் கீழக்கரை ஊராட்சிகளை சேர்ந்த துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் 30 பேர்களுக்கு எசனை ஊராட்சி மன்றத் தலைவர் சத்யாபன்னீர்செல்வம் தலா 25 கிலோ அரிசி தேவையான மளிகை பொருட்களை வழங்கினார். முன்னதாக 2 ஆயிரம் முகக்கவங்கள் எசனை கிராமத்தை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைவர் சத்யாபன்னீர் செல்வம் தெரிவித்தார். அப்போது, துணைத்தலைவர் வளர்மதி சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் சரவணன், கீழக்கரை தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


படவிளக்கம்: பெரம்பலூர் அருகே உள்ள எசனை ஊராட்சித் தலைவர் சத்யாபன்னீர்செல்வம் ஊராட்சி பணியளார்களுக்கு கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய போது எடுத்தப்படம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!