Relief materials for the Nagapattinam areas of Gaja storm affected: Senthamangalam MLA Sent
டெல்டா மாவட்டவங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை லாரி மூலம் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் அனுப்பி வைத்தார்.
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் அடித்த கஜா புயலால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவு வகையில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் தனது சொந்த செலவில் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அரிசி, தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் வகைகள், வேஷ்டி சேலைகள், பாத்திரங்கள் போன்ற பொருட்களை வாங்கி நாகப்பட்டினத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைத்தார். சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து அதிமுக செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், பாஸ்கர், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.