Relief materials worth Rs. 18 lakh for the affected areas of Gaja
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியினை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து அனுப்பி வைத்த பின்னர் தெரிவித்ததாவது:
நாமக்கல் மாவட்டத்திலிருந்து அரிசி 20 மூட்டைகள், சர்க்கரை 30 மூட்டைகள், கோதுமை மாவு 5 மூட்டைகள், ரவை 15 மூட்டைகளும், 55 டின் சமையல் எண்ணையும், 45 மூட்டைகள் துவரம் பருப்பு, பாசிபயிறு 2 மூட்டைகள், புளி 3 மூட்டைகள், சிவப்பு மிளகாய் 8 மூட்டைகள், பிஸ்கட் 40 பெட்டிகள், உப்பு 5 மூட்டைகள், 9 பண்டல் துண்டு மற்றும் வேட்டிகள், 1 மூட்டை மஞ்சள் தூள், 10 மூட்டைகள் காபி தூள், 10 மூட்டைகள் மசாலா பொருட்கள், 20 மூட்டைகள் நூடுல்ஸ் மற்றும் சேமியா பொருட்கள், 100 எண்ணிக்கையில் மேட்கள், 2 மூட்டைகள் நாப்கின்கள் உள்ளிட்ட ரூ.7.02 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆகமொத்தம் இதுவரை கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இதுவரை ரூ.18 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்துமேலும் 14 துப்பரவு பணியாளர்கள், 6 மரம் வெட்டுபவர்கள் கொண்ட குழு அடங்கிய வாகனத்தினையும் அனுப்பி வைத்தார். தற்போது வரை கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களாக திருவாரூர் மாவட்டத்திற்கு 20 எண்ணிக்கையில் ஜெனரேட்டர்கள், 13 எண்ணிக்கையில் இயந்திர ரம்பங்கள், ஒரு ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவைகளும்,
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 5 தண்ணீர் லாரிகளும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 9 எண்ணிக்கையில் ஜெனரேட்டர்களும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு ஜெனரேட்டரும், ஒரு ஜேசிபி இயந்திரம் என மொத்தம் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 30 எண்ணிக்கையில் ஜெனரேட்டர்கள், 13 இயந்திர ரம்பங்கள், 5 தண்ணீர் லாரிகள், 2 ஜேசிபி இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உதவி பொறியாளர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், மரம் வெட்டுபவர்கள், மின்வாரிய பணியாளர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார்(பொது) பால்பிரின்ஸிலிராஜ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.