Relief supplies for the victims of the Gaja storm on behalf of the Perambalur Legal Services Commission

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதி மக்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை, பெரம்பலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். பாலராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

நிவாரண பொருட்களாக அரிசி, போர்வைகள், துண்டுகள், பிஸ்கட்டுகள், ரஸ்க்குகள், தண்ணீர் பாட்டில்கள், கொசுவர்த்தி சுருள்கள், மெழுகுவர்த்தி, பிரட்டுகள், மளிகை சாமான்கள், பெண்கள் அணியக் கூடிய ஆடைகள், சிறுவர் ஆடைகள் என சுமார் 71 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வாகனத்தில் ஏற்ற வைக்கப்பட்டிருந்தது.

அந்த வாகனத்தை முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது நீதிபதிகள் விஜயகாந்த், வினோதா,தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, மற்றும் வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் வள்ளுவன்நம்பி, பாபு, முகமதுஇலியாஸ், அரசு வழக்கறிஞர்கள் கணேசன், உள்பட நீதிமன்ற ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!