தமிழகத்தில் மே.16ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை நேர்மையான முறையில் 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு வகையான விழிப்புணர்வு பேரணி, துண்டுபிரசுரங்கள் விநியோகம், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள், ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திடுவது உறுதி மொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு வழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், வியாபார நிறுவனங்கள், தனி நபர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக மே16ந்தேதி 100 சதவீதம் வாக்களித்திட தயாராகுங்கள் என்பதை வலியுறுத்திடும் விதமாக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி விற்பனை நிறுவனத்தில் உடைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கு மே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கைப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியை பெரம்பலூர் கோட்டாச்சியரும், சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருமான பேபி துவங்கி வைத்தார்.