Republican Day Celebration in Perambalur: Collector V. Santha hoisted the National Flag

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா முன்னிலையில், மாவட்ட கலெக்டர் வே.சாந்தா இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 149 பயனாளிகளுக்கு ரூ.2.60 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், தேசியக்கொடி நிறத்திலான பலூன்களையும் கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி நிஷாபார்த்திபன் ஆகியோர் பறக்கவிட்டனர். பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் 8 நபர்களுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 18 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் பதக்கங்களையும், மெச்சத்தகுந்த வகையில் பணி செய்தமைக்காக 15 காவலர்களுக்கு சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 126 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவா; வழங்கினார்

இதில் முதலாம் படைப்பிரிவிற்கு உதவி ஆய்வாளர் வரதராஜன், இரண்டாம் படைப்பிரிவிற்கு உதவி ஆய்வாளர் எம்.மதுமதி, மூன்றாம் படைப்பிரிவிற்கு உதவி ஆய்வாளர் ரத்தினம் ஆகியோர் தலைமையேற்று வழி நடத்தி சென்றனர்.

பெரம்பலூர் குடியரசு தின விழாவில், ரூ. 2கோடியே 59 லட்சத்து 76 ஆயிரத்து 874 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 66 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 42 லட்சம் மதிப்பிலும், முன்னாள் படை வீரர் நலன் சார்பில் ஒருவருக்கு 25 ஆயிரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பேர்களுக்கு ரூ.29 ஆயிரத்து 689-ம், வேளாண்துறை சார்பில் 6 பேர்களுக்கு ரூ. 60 ஆயிரமும், வேளாண்மைத் பொறியியல் துறை சார்பில் 13 பேர்களுக்கு 34 லடசத்து 49 ஆயிரத்து 244 ம், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரமும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.34 ஆயிரமும், கூட்டுறவுத் துறை சார்பில் 2 குழுக்களுக்கு ரூ. 16 லட்சத்து 50 ஆயிரமும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சர்பில் 2 குழுக்களுக்கு ரூ. 1கோடியே 28 லட்சத்து 6 ஆயிரமும், தாட்கோ மூலம், 2 நபர்களுக்கு ரூ. 7 லட்சத்து 48 ஆயிரத்து 221 -ம், சமூக நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ. 1லட்சத்து 53 ஆயிரத்து, 440-ம்இ ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 2 நபர்களுக்கு ரூ. 3 லட்சத்து 60 ஆயிரமும்இ மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ரூ. 38 லட்சமும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 32 பேர்களுக்கு ரூ. 4 லட்சத்து 9 ஆயிரத்து 280ம் என மொத்தம் . 2கோடியே 59 லட்சத்து 76 ஆயிரத்து 874 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா வழங்கினார்.

பின்னர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 39 மாணவ, மாணவிகள், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகள், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 24 மாணவ, மாணவிகள், தனலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 28 மாணவ, மாணவிகளும், ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவிகளும், பெரம்பலூர் சாரதாதேவி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவிகள் என மொத்தம் 157 மாணவ, மாணவிகள் தேசப்பற்று தொடர்பான கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களையும் பங்குபெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராசேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், முதன்மை கல்வி அலுவலர் மதிவானன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!