Request to CITU, Collector to relocate Tasmac liquor stores and bars at Perambalur bus stand!

கோப்பு காட்சி

பெரம்பலூர் சி.ஐ,டி.யூ சங்கம் சார்பில், அதன் மாவட்டத் தலைவர் அகஸ்டின், கலெக்டர் வெங்கடபிரியா-விற்கு விடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு வருகின்றனர்.

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில், இயங்கி வரும், 3 டாஸ்மாக் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில், இருந்து வெளிவரும் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இடமாற்றம் செய்ய வேண்டும், மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறி அரைநிர்வாணத்துடன் அலைவதும், போதையில் படுத்து உருளுவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதும், பெண்களை ஆபாசமாக வர்ணப்பதும், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால், பெண் பயணிகள், மாணவிகள், ஆட்டோ ஏற முடியாமலும், நடைபாதைகளில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், சிதிகளை மீறி, புதிய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள மதுக்கடைகள் மற்றும் மதுக் கூடங்களை அப்புறப்படுத்தி பெண்களுக்கு உரிய சுகந்திரத்தையும், பாதுகாப்பையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு கோரிக்கை மனு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!