Request to Perambalur Municipal Commissioner to cooperate in celebrating Smoke Free Bogi

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட தெருக்களில் பழைய குப்பைகளை தீயிட்டு கொளுத்தவோ, தெருக்களில் குப்பைகளை கொட்டாமல், நகராட்சி வாகனங்களில் குப்பைகளை வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பொதுமக்களுக்கு ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நகராட்சி ஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழக அரசின் உத்தர வின்படி இந்த ஆண்டு புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் நகராட்சியில் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒன்று முதல் எட்டு வரை ஒரு மண்டலம்
9 முதல் 16வரை ஒரு மண்டலம், 17 முதல் 21 வரை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு துப்புரவு பணி மேற் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டு வீடுகளில் சேமிக்கப்படும் தேவையில்லாத பொருட்கள் பழைய துணிகள் பழைய டயர் பயன்படுத்த இயலாத பழைய புத்தகம் மற்றும் இதர பயன்படுத்த முடியாத பழைய பொருட்களை வீடு தோறும் நகராட்சி மூலம் 7ம்தேதி முதல் 14ம் தேதி வரை நகராட்சி வாகனங்களில் சேகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு புகையில்லா போகி உருவாக்குவதற்கு மேற்படி பழைய பொருட்களை நகராட்சி வாகனங்களில் வழங்கி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பொதுமக்கள் மேற்படி பழைய பொருட்களை சாலைகளில் வீசி எறிந்தாலும், டயர்களை சாலைகளில் தீ வைத்து கொளுத்தினாலோ, பொது இடங்களில் குப்பைகளை கொட்டினாலோ அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!