Request to repair the road dug in Ladapuram!
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லாடபுரம் கிராமத்தில் உள்ள கிழக்கு பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலைப்பணி கிடப்பில் உள்ளதை படத்தில் காணலாம். இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உரிய காலத்தில் பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.