Request to the Commissioner of School Education to appoint Agricultural Graduates in Agricultural Science Education from 6th to 12th Class as Masters Teachers!

வேளாண்மைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர், பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள ;ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வேளாண்மை அறிவியல் கல்வியை பொதுக் கல்வித் திட்டத்தில் அறிமுகம் செய்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயின்ற தொழிற்நுட்ப பட்டதாரிகளை முதுநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டுகிறோம்.

தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மிகமிக குறைவாக 5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக வழங்க வேண்டும், அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் வேளாண்மை தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய பாடங்களை படித்திட அனுமதிக்கவும்,

வேளாண் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு கால்நடை மருத்துவ கல்லூரிகள், மீன்வளக் கல்லூகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போல , இந்திய மருத்துவ படிப்புகளில் அனுமதித்து இட ஒதுக்கீடு வழங்கவும்,

தொழிற்கல்வி ஆசிரியர் என்ற நிலையிலிருந்து முதுகலை வேளாண்மை பாட ஆசிரியராக நிலை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!