Reservation should not be given without conducting caste wise survey, resolution of Yadava Mahasabha State Executive Committee meeting!
யாதவ மகாசபை தலைவர் மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமையில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் அரங்கில் இன்று யாதவ மகாசபை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், 2022 ஜூலை11ல் சென்னை எழும்பூரில் நடைபெறும் முதல் சுதந்திரப் போராட்ட மாவீரன் வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவீரன் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும், அழகுமுத்துக்கோன் குருபூஜையை கட்டாளங்குளத்தில் அமைதியான முறையில் சிறப்பாக நடத்த காவல்துறை அனுமதிக்க கோருகிறோம்.
நீண்ட நாள் கோரிக்கையான கால்நடை வாரியம் அமைத்து, அதில் யாதவர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் யாதவர் ஒருவரை உறுப்பினராகவும், ஆடு வளர்ப்போருக்கு மானிய விலையில் வலை, கம்பி, தார்பாய் உள்ளிட்ட மாநில அரசு பொருட்களை வழங்கவும்,
பெரும்பான்மையான தனித் தொகுதிகளில் யாதவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு அத்தனி தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக அறிவிக்கவும், (உதாரணமாக சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிபுத்தூர், பரமக்குடி, மானாமதுரை, பெரம்பலூர், துறையூர், திட்டக்குடி ,திருத்தறைப்பூண்டி, சீர்காழி, கீழ்வேலூர், வானூர், திண்டிவனம், செங்கம், வந்தவாசி, ஊத்தங்கரை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், எழும்பூர், பொன்னேரி)
சாதி, மதமற்றவர்கள் என்று அரசிடம் சான்றிதழ் பெறுபவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்கிறார்கள். இது மதமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே அனைத்து சமுதாய தலைவர்கள் தங்கள் சமுதாயத்தை சார்ந்தவர்களிடம் இக்கருத்தை எடுத்துச் சென்று மதமாற்றத்தை தடுக்கவேண்டும் என்றும், ஜாதி என்பது இறைவனும் பெற்றோரும் கொடுத்த பட்டம் என்றும் அதனை அனைவரும் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும்
சாதிவாரியான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி அனைத்து சாதிக்குமான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கவேண்டும், கணக்கெடுப்பு இல்லாமல் எந்த ஜாதிக்கும் இடஒதுக்கீடு வழங்க கூடாது என்ற தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவற்றப்பட்டது.