Residences for Judges at Perambalur at a cost of Rs.2.63 crore; Madras High Court Judge N. Mala opened!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 4 நீதிபதிகளுக்கான ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் என். மாலா திறந்து வைத்தார். கலெக்டர் கற்பகம், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.பல்கீஸ் முன்னிலை வகித்தனர்.
ரூ.98.91 இலட்சம் மதிப்பீட்டில், 3604.94 சதுர அடி அளவுள்ள, முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் கூடிய அமர்வு நீதிபதிக்கான குடியிருப்பும், ரூ.64.31 இலட்சம் மதிப்பீட்டில், 2199.07 சதுர அடி அளவுள்ள சார்பு நீதிபதிக்கான குடியிருப்பும், ரூ.49.98 இலட்சம் மதிப்பீட்டில் 1930.83 சதுர அடி அளவுள்ள கூடுதல் மகிளா நீதிபதிக்கான குடியிருப்பும், ரூ.49.98 இலட்சம் மதிப்பில் 1930.83 சதுர அடி அளவுள்ள நீதிபதிக்கான குடியிருப்பும் என மொத்தம் ரூ.2.63 கோடி மதிப்பீட்டிலான 4 குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ்.முத்துகுமரவேல், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம்.மூர்த்தி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி தனசேகரன், சார்பு நீதிபதி அண்ணாமலை, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜ மகேஷ்வர், நீதித்துறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதா சேகர், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் (குன்னம்) கவிதா, (வேப்பந்தட்டை) பர்வதராஜ் ஆறுமுகம், நீதித்துறைச் சார்ந்த அலுவலர்கள், வழக்கறிஞர்கள், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.