Residents block road in Perambalur demanding removal of Tasmac shop!
பெரம்பலூர், ஆத்தூர் சாலையில் உள்ள ஜமாலியா நகர், எம்.எம்.எஸ்., நகர், தேவர் நகர்களை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எண் 6325யை அகற்றக் கோரி இன்று மதியம் சுமார் 12 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே உள்ளளதால், குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக பைக்குகளை ரோட்டிலேயே நிறுத்துவதோடு, போதை தலைக்கேறியதும் பாட்டில்களை உடைப்பதோடு அருவருப்பாக பேசுவதும், வசைப் படுவதாகவும் உள்ளனர். மேலும், பல விபத்துகளுக்கு காரணமாக மதுப்பிரியர்கள் இருப்பதால், மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி போரட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர். இதனால், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.