Resolution at the meeting of the Mather Sangam Veppur Union Council urging the immediate reopening of the Olaippadi paper mill.



அனைத்திய ஜனநாயக மாதர் சங்க வேப்பூர் ஒன்றிய சிறப்பு பேரவைக்கூட்டம் குன்னத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முருக்கன்குடி கிளைசெயலாளர் பி.சின்னப்பொண்ணு தலைமை வகித்தார். நிர்வாகிகள் எல்.தனலெட்சுமி, எ.அபிராமி, கே.சுகிதா எம்.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எ.கலையரசி மாவட்ட செயலாளர் பி.பத்மாவதி, ஆர்.வசந்தா, மற்றும் விதொச நிர்வாகிகள் எஸ்.ஆறுமுகம், ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாதர் சங்க மாநில துணைசெயலாளர் எஸ்.கீதா கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும், விவசாயத்திற்கு எதிரான வேளாண்சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளை அடித்து நொறுக்கும் மோடி அரசுக்கு மாதர்சங்கம் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100நாள் வேலை வாய்ப்பை 200 நாட்களாக்கி ரூபாய் 256 சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும், வேப்பூர் ஒன்றியத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயா;த்தும் வகையில் வங்கி மூலம் கறவை மாடு லோன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓலைப்பாடியில் மூடிக் கிடக்கும் காகித ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நமையூர் கிராமத்தில் தெருவிளக்கு, சாலைவசதி, சாக்கடை வசதியின்றி கிராம மக்கள் அவதிப்படுவதால், அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கார்குடி கிளை தலைவர் ஜெயா நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!