Resolution at the Road Workers Union meeting, demanding that the Highways Department fill the vacancies!

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க பெரம்பலூர் உட்கோட்ட 8 வது மாநாடு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. துணைத்தலைவர் சி.காட்டுராஜா தலைமை வகித்தார். முன்னதாக இணைசெயலாளர் அம்மாசி வரவேற்றார். மதியழகன் அஞ்சலி தீர்மானமும், பொருளாளர் ஆர்.மனோரன் நிதிநிலை அறிக்கையும் அளித்தனர். கோட்ட தலைவர் கே.மணிவேல் சிறப்புரை ஆற்றினார். மாநில செயற்குழு சி.சுப்ரமணியன் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் எஸ்.இளங்கோவன், பி.குமரிஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் சி.மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி நிறைவுரை ஆற்றினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சாலைப் பணியாளர்கள் பணிநீக்கத்தின் போதும் பணியில் இருக்கும் போதும் இறந்த பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு ஆபத்துப்படி 10 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. முடிவில் ராமநாயகம் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!