Resolution in Communist Perambalur District Council meeting to make more people participate in social and religious harmony human chain!

வரும் அக்.11 அன்று நடக்கும், சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி திரளாக பொதுமக்கள் திரளாக பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின், பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் பெரம்பலூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் சிவானந்தம் எம்.கருணாநிதி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநிலக்குழு சாமி.நடராஜன், கட்சியின் மத்திய மாநிலக்குழு முடிவுகள் குறித்து விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் பெரம்பலூர் மாவட்ட கோரிக்கைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு அ.கலையரசி, எஸ்.அகஸ்டின், அ.ரெங்கநாதன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.கே.ராஜேந்திரன், டாக்டர். சி.கருணாகரன் மகேஸ்வரி, பி.சின்னப்பொண்ணு, பி.ரெங்கராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளார்கள் 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 8 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அக்டோபர் 11 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி வெற்றி பெற திரளாக பொதுமக்களை கலந்து கொள்ள செய்ய பேரவை கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் படைப்புழு தாக்குதல் காரணத்தால் மிகுந்த நஷ்டமடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பேரவை கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!