Resolution in Perambalur PMK General Committee meeting to request caste-wise census!
பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் க. செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் க.ராஜேந்திரன், ஆ.அன்புச்செல்வன், கா.கண்ணபிரான், இரா. தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வன்னிய சங்கத் தலைவர் க.வைத்தி சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், வரும். அக்.9ல் பிறந்த நாள் காணும் அன்புமணி எம்.பிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, ஈழத்தமிழர் படுகொலைக்கு இலங்கை அரசு மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க ஐநா அவையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அன்புமணி ராமதாஸுக்கு பாராட்டுவது, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி அனைத்து சமூகத்தினருக்கான உரிய இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வலியுறுத்திய புள்ளி விவரங்களை விரைவாக காலதாமதம் செய்யாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மருத்துவர் ஐயா கூறும் செயல் திட்டங்களை செயல்படுத்தவும், வேப்பந்தட்டையில் 15 ஆண்டுகளாக இயங்கி வரும் பருத்தி ஆராய்ச்சி மையத்தை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தியும் அவற்றில் 20 ஆயிரம் மூட்டைகள் சேமிக்கும் வகையில் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த நிலங்கள் கையகப்படுத்தி 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்காததால் அந்த நிலங்களை உரிய விவசாயிகளிடமே தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏங்கி வரும் எம் ஆர் எப் டயர் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்,
வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்ட தடுப்பணை அமைத்து பம்பிங் மூலம் செந்துறை வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று அதன் மூலம் விவசாயம் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்களை கைது செய்த தமிழக அரசு இப்போது குழு வன்மையாக கண்டிக்கிறது மேலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் ஆர் பி எஸ் கே திட்டத்தில் ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணிபுரியும் மருந்தாளுனர்களுக்கு தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மதுரா நாட்டார் செல்வராசு வரவேற்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் நகர செயலாளர் இமயவர்மன் நன்றி கூறினார்.