Resolution Passed at the DNT Welfare Society meeting held in Perambalur demanding separate reservation

தமிழகத்தில் சீர்மரபினர்களுக்கு 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என சீரமரப்பினர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

கூட்டத்திற்கு ஊராளி கவுண்டர் நகர இளைஞரணி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார், மாநில ஊராளி கவுண்டர் முன்னேற்ற சங்க தலைவர் கணேசன், பொருளாளர் தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சீர்மரபினர் நலச்சங்க தலைவர் ஜெயமணி, முன்னாள் எம்எல்ஏ சோலைராஜ், உலக தமிழ் சங்க முன்னாள் இயக்குநர் பசும்பொன், சமூக சேவகர் குபேந்திரன், ஊராளிக் கவுண்டர் மாநில தலைவர் ராஜவர்மன், செயலாளர் இளங்கோவன், தவமணி தேவி உட்பட பலர் பேசினர்.

அகில இந்திய நதி நீர் இணைப்பு திட்ட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு நிருபர்களிடம் தெரிவித்ததாவது: வெள்ளையனே வெளியேறு என்று சுதந்திர போராட்டத்தில் ஆயுதம் எடுத்தவர்களை எல்லாம் பழங்குடியினர், சீர்மரபினர், குற்றப்பரம்பரை என வெள்யைர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் இந்த சீரமரப்பினர் வகுப்பைச் சேர்ந்த 68 சமூகத்தவர்கள்.

சமூக நீதி பேசுகின்ற தமிழகத்தில் சீர்மரப்பினர் மக்களுக்கு தொடர்ந்து அநீதியே இழைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அன்னிய அரசு வழங்கிய உரிமைகளும், சலுகைகளும் கூட பறிக்கப்பட்டு விட்டன. எனவே அவர்களின் வாழ்வை மேம்படுத்த 68 சமுதாயமும் ஒருங்கிணைந்து அவர்களுக்கு உரிய உரிமையை மீட்க பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

பல ஆணையங்கள் அரசின் இட ஒதுக்கீடு குற்றப்பழங்குடியினர் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையவில்லை. எனவே அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அவசியம் என்று பரிந்துரைத்தும் இன்றுவரை வழங்கப்படவில்லை. எனவே சீரமரப்பினர் மக்களுக்கு ஓபிசி உள் ஒதுக்கீடாக 9 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

பழங்குடியினர், சீரமரப்பினர் இனத்தை சேர்ந்த எங்களுக்கு மத்தியில் 9 சதவீதம் வேண்டும், மாநிலத்தில் 10 சதவீத இடதுக்கீடு வேண்டும். எங்களுக்கு இட ஒதுக்கீடு தரவில்லையென்றால் முழுமையாக எதிர்போம். மேலும் வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம். எங்களை எதிர்ப்பவர்களை நாங்கள் எதிர்த்து தேர்தல் வேலை செய்வோம் என்றார். பேட்டியின்போது மாநில ஊராளி கவுண்டர் முன்னேற்ற சங்க தலைவர் கணேசன் உடனிருந்தார். மேலும், கூட்டத்தில், தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.சிவக்குமார் மற்றும் பெரம்பபலூர் மாவட்டத்தை சேர்ந்த ஊராளி கவுண்டர்கள், கல் ஒட்டர், மண் ஒட்டர், மர ஒட்டர், போயர்கள், கள்ளர், தேவர், மறவர், அகமுடையார், முத்திரையர், அம்பலக்காரர், பிரமலைக்கள்ளர், குறவர் உள்ளிட்ட 68 சமுதாய சங்க பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!