Resolution passed at the Tamil Nadu Farmers’ Association meeting held in Perambalur demanding payment of Rs. 40 as milk purchase price.

பெரம்பலூரில், தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தலைவர் நாரயணசாமி நாயுடுவின் 97வது பிறந்த நாள் பிப்.6 அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சிலை முன்பு கோரிக்கை முழக்கம் நடத்துவது, தொடர் மழையால் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளி போன்ற பாதிப்பான பயிர்களுக்கு, கணக்கு எடுப்பு நடத்தி உரிய நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும், பெரம்பலூர் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முதல்வர் பெரம்பலூருக்கு வருதை தந்த போது அறிவித்தபடி பிப்ரவரி 2021க்குள் வழங்கிடவும், கரும்பு டன் ஒன்றிற்கு ரூ. 4ஆயிரமும், பாலுக்கு ரூ. 40ம் விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்றும், மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும், கட்டணம் செலுத்தும் தோட்டக் கலை பயிர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவும், மீண்டும் விவசாயிகளுக்கு மின்வினியோம் முன்பை போன்று, காலை 6 மணி முதல் 12 வரை வழங்க வேண்டும், என்றும். மின்வாரியத்தை தனியாருக்கு விற்க கூடாது என்றும், விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யவும், தொடர் வறட்சி, அடுத்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றக் கடன்களை ரத்து செய்திடவும், மழையால் பாதிக்கபட்ட பயிர்களுக்கு காப்பீடு பெற்ற நிறுவனங்கள் உடனே இழப்பீடு வழங்கவும், விவாசாயிகள் சாகுபடி பயிர்களை அவர்களே பதிவு செய்யும் வகையில் இ-அடங்கல் செயலி முறையை கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்டத் தலைவர் பி.மாணிக்கம், மாவட்டச் செயலாளர் வி.நீலகண்டன், மாவட்ட பொருளாளர் எ.மணி, உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், பிரதிநிதிகள், விவாசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!