Respiratory problem due to burning garbage at garbage dump near Perambalur; Public fear!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நூத்தப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெற்குணம் கிராமத்தில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அன்றாடம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அகற்றப்படும் குப்பைகளை வ.உ.சி நகர் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் கொட்டப்பட்டு தினந்தோறும் தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருவதோடு மட்டுமல்லாமல் சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், குப்பை கிடங்கை மாற்று இடத்தில் அமைத்து பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் அமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தையும் ஊராட்சி நிர்வாகத்தையும் பொதுமக்கள் கேட்டு கொள்கின்றனர்.