Retired Officer Association demonstration demanding the focal point 2!
தமிழகம் முழுவதும் , 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, அச்சங்கத்தின் சார்பில், ஒரு நபர் குழு, அறிக்கை வெளியிடவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், 21 மாத நிலுவை தொகை, மருத்துவ பணியை உயர்த்தி வழங்க கோரியும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்வதுடன், தணிக்கை தடையை திரும்ப பெற வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.