Road blockade near Perambalur: Traffic affected for an hour!
பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட அருமடல் பிரிவு பாதை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியர், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றில் கோரிக்கை மனு அளித்துள்ள நிலையில், எப்படி கோரிக்கை மனு கொடுக்கலாம் என கோபமடைந்த செங்குணம் ஊராட்சி செயலர் கோவிந்தன் குடிபோதையில் பொதுமக்களை அவதூறாக பேசி தகராறு செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://dsmatrimony.net/
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.