பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை புறக்காவல் நிலையம் அருகில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைபாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், குபேந்திரன், நெடுஞ்சாலை ரோந்து உதவி இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கினர்.
மேலும் பெரம்பலூர் ஆத்தூர்-சாலையில் சென்ற அனைத்து வாகனங்களையும் மறித்து முகப்பு விளக்குகளில் அளவுக்கு அதிகமான ஒளி வெளிவராத வகையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இதில் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.