Road Safety Week Celebration at Perambalur Lakshmi First Aid Training Centre!
பெரம்பலூர் லட்சுமி முதலுதவி பயிற்சி மையத்தில் டிரைவர் கண்டக்டர்களுக்காக மன அழுத்த மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.
பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரம் பகுதியில் லட்சுமி மருத்துவமனை வளாகத்தில் லட்சுமி முதலுதவி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது இம்மையத்தின் மூலம் வாகன டிரைவர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு முதலுதவி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி நேற்று முன்தினம் லட்சுமி முதலுதவி பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தியது விழாவுக்கு லட்சுமி மருத்துவமனைகளின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கமாக பேசினார். லட்சுமி மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் தமிழரசி மருத்துவமனை சூப்பர்வைசர் சங்கீதா, நர்சுகள் தேவி, ரம்யா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.