Road workers of Tamilnadu highway department, veiled demonstration to emphasize the demand!
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி முக்காடு அணிந்து மாலை நேர ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
சாலை பணியாளர்கள் 41 மாத பணியை நீக்க காலத்தை முறைப்படுத்தி பணிக்காலமாக அறிவித்து பணப்பயன் வழங்க வேண்டும், உயிர்நீத்த சாலை பணியாளர்களின், குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து தலையில் முக்காடு அணிந்து கோஷமிட்டவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன், மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன், மாநில துணைத் தலைவர் சிவகுமார், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
விளம்பரம்: