Road Workers’ Union demands govt to abandon decision to privatize road maintenance

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 7வது உட்கோட்ட மாநாடு பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனையில், உட்கோட்ட தலைவர் கே.மணிவேல் தலைமையில் நடந்தது. அதில், சாலை பராமரிப்பு பணியை அரசு தனியாரிடம் வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு, அரசே ஏற்று சாலைப்பணியாளர்களை கொண்டு நெடுஞ்சாலை பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெற்ற ஊழியருக்கான ஊதியம் ரூ.5200 லிருந்து ரூ.20200, தர ஊதியம் ரூ.1900 நிர்ணயம் செய்து அதனடிப்படையில் 7வது ஊதிய மாற்றம் நிர்ணயம், செய்து பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானங்கள் நிறைவேற்றினர். முன்னதாக ஆர்.மனோகரன் வரவேற்றார். மதியழகன் நன்றி கூறினார். திரளான சாலைப்பணியாளர்கள், சத்துணவு மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!