Road works worth Rs 3.66 crore; Inspected by Perambalur Collector Venkatapriya!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் ரூ.3.66 கோடி மதிப்பீட்டில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட வேப்பந்தட்டை ஊராட்சியில் ஊரக சாலைகள் பராமரிப்புத் திட்டத்தின் (2020-21) கீழ் ரூ.18.95 இலட்சம் மதிப்பீட்டில் வேப்பந்தட்டை முதல் நெய்க்குப்பை வரையிலான 1.55 கிமீ தொலைவிற்கு அமைக்கப்ட்டிருந்த தார் சாலையினையும், மலையாளப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் (2019-20) கீழ் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் வெட்டுவால்மேடு முதல் சாஸ்திரிபுரம் வரையிலான 3.6 கி.மீ நீளத்திற்கு தார் சாலையையும்,

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி கிராம சாலை (2021) திட்டத்தின் கீழ் ரூ.2.04 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர்-ஆத்தூர் சந்திப்பு சாலை முதல் சோமண்டாபுதூர் வழியாக வடக்குமாதவி வரை அமைக்கப்பட்டு வரும் தார் சாலையினையும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.களத்தூர் ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் (2019-20) கீழ் ரூ.12.82 இலட்சம் மதிப்பீட்டில் டி.களத்தூர் மயானத்திற்கு செல்லும் சாலையினை தார் சாலையாக புதுப்பிக்கப்பட்டு முடிவுற்ற பணியையும் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைக் காலம் தொடங்குவதற்கு முன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து பணிகளை விரைந்து முடிக்கவும், உயர்நத தரத்தில் தரமாக அமைக்கவும், மழைநீர் எந்த தடங்கலுமின்றி செல்லும் வகையிலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மலையாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வீடுகளில் கழிப்பிட வசதிகள் தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்து தரப்பு மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி அப்போது, கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் அருளானந்தம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!