roadblock in perambalur, the Death teenager’s relatives demanding to take appropriate action

பெரம்பலூர் அருகே இளம்பெண் மர்ம சாவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைமறியல்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்த தங்கவேலின் 3வது மகளான ஐஸ்வர்யா (வயது 20) பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார், கடந்த ஞாயிறு அன்று வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனதால் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று கிணற்றில சடலமாக மிதந்தார்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இளம்பெண் ஐஸ்வர்யா சடலம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உறவினர்கள் இன்று காலை பெரம்பலூர் அரசு மருத்து மனை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது உறவினர்கள் தெரிவித்ததாவது: ஐஸ்வர்யாவின் காதலனான குரும்பலூர் புதூரை சேர்ந்த பார்த்திபன் என்பவரை கைது செய்ய வேண்டும், அவரது நண்பர் சின்னசாமி மற்றும் உறவினர்களிடையே விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்.

காதலர்கள் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதால் பார்த்திபன் மற்றும் உறவினர்கள் நண்பர்களிடம் விசாரணையை தீவிர படுத்த வலியுறுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய பேச்சு வார்த்தை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரில் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இறந்த இளம் பெண்ணின் உடல் கூறு ஆய்வு இன்று மாலை நடக்க உள்ளது.

அதன் பிறகே ஐஸ்வர்யா இறப்பு குறித்த உரிய விவரம் தெரிய வரும். போலீசார் இந்த வழக்குத் தொடர்பாக இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!