Roads near Perambalur are packed with ballot papers!

பெரம்பலூர் மாவட்டம், சித்தளி பிரிவு – ஒதியம் பிரிவு சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் அரியலூர் பெரம்பலூர் சாலை ஓரம் கட்டுக்கட்டாக வாக்குச்சீட்டுகள் கடந்ததால் பெரும் பரபரப்பு ஏறப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பூட்டு, ஆட்டோ, கைஉருளை, ஏணி சின்னங்களை கொண்ட வாக்குசீட்டுகளில், குறிப்பிட்ட சின்னங்களுக்கு வாக்களிப்பட்ட முத்திரை கொண்ட சீட்டுகளை கண்ட போக்கர்கள் குன்னம் போலீசார் மற்றும் வருவாய், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் காற்றில் பறந்து கொண்டிருந்த வாக்குசீட்டுகளை அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கைப்பற்றி குன்னம் வட்டாசியர் அலுவலகததிற்கு கொண்டனர். சிதறி கிடந்த வாக்கு சீட்டுகளை காண அக்கம் கிராமத்திற்கு போட்டி போட்டு கொண்டு பைக்குகளில் குவிந்தனர். அது மட்டுமல்லாமல் வேட்பாளர்கள் பலர் மற்றும் ஆதரவாளர்கள் பலர் வந்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், இது குறித்து மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு சீட்டுகள் உண்மையானவையா, அல்லது போலியாக தயாரிக்கப்பட்டவையா, அல்லது எண்ணப்பட்ட வாக்கு சீட்டுகள் பலத்த பாதுகாப்புகளையும் மீறி எப்படி சாலைக்கு வந்தது எப்படி என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்ட வேட்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!