Robbers killed an elderly couple for jewelry money near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (75). மனைவி மாக்காயி (70). கணவன் மனைவியான இருவரும் நேற்று இரவு வழக்கம் போல அவர்களது வீட்டில் தூங்க சென்று விட்டனர். இன்று காலை வெகு நேரம் ஆகியும் வீடு திறக்காததால் உறவினர்கள் வீட்டினுள் எட்டிப் பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். மேலும், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தடயங்களை வைத்து பிடித்து விடக்கூடாது என்பதற்காக பீரோ உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் பொடியை கொட்டி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் மோப்பநாய் தடைய நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.