Robbers stole 7 pound gold chain from a woman near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த வெங்கனூரை சேர்ந்தவர் கந்தசாமி மகள் மஞ்சுளா (40), இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று பணியை முடித்து கொண்டு மதியம் தனது ஸ்கூட்டியில், கிருஷ்ணாபுரத்திலிருந்து வெங்கனூரை நோக்கி பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை அருகே வழிமறித்த, அடையாளம் தெரியாத ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள், மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் அப்பகுதியிலும், வழித்தடத்திலும் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.