Robbers who attacked the woman and stole 5 pounds of jewelry in Perambalur!


பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மதரசா ரோடு அருகே உள்ள சூர்யா நகரை சேர்ந்தவர் அப்துல் அஜுஸ். இவருடைய மனைவி ரஜியாபேகம் (75). இவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் ரஜியாபேகம் தனியாக வசித்து வந்தார். நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ஆண், பெண் இருவர் உள்ளே நுழைந்து ஆண் மூதாட்டியின் தலையில் கடுமையாக தாக்கினார். இதில், மூதாட்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்நேரத்தில் அங்கிருந்த பெண், மூதாட்டி கையில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க வளையல்களை அபகரித்து கொண்டார். ரத்தம் சொட்ட சொட்ட சத்தம் போட்டு கொண்டே வெளியே வந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, அவரை அருகில் இருக்கும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 8 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தெருக்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!