robbery: 10 pounds of golden house in the locked house near Perambalur, Rs.2.25 lakh of cash
பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்-செல்வி தம்பதியினர். இவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் திருச்சி மாவட்டம் சமயபுரத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவில் பூட்டப் பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சிடைந்த ரமேஷ்-செல்வி தம்பதியினர் சம்பவம் குறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தன், பேரில் போலீசார், தடய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்து கைரேகை மற்றும் தடயங்களை கைப்பற்றி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
கிராமத்தின் மையப்பகுதியில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் குன்னம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.