Robbers break Hundy at temple near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் உண்டியல், நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ஆயிரக்காணக்கான ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.