Robbery attempt at Valikandapuram temple near Perambalur! The robbers were deceived by not being able to separate the wire fence!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வாலிகண்டபுரத்தில் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது வாலீஸ்வரர் திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகள் புராதானம் மிக்க வாலீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் உள்ள விலை மதிப்பு மிக்க சிலைகளை கொள்ளையடிக்க, திட்ட மிட்ட கொள்ளையர்கள், நேற்றிரவு கம்பி வலை மேற்கூறையை பிரித்து உள்ளே இறங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். கம்பி வேலியை உடைத்து கொள்ளையர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் புராதான
உலோக சிலைகள் அனைத்தும் தப்பித்தது. பாதுகாப்பான கம்பி வேலி அமைத்திருந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்ப சென்றனர்.

இது குறித்த தகவலின் பெயரில், மங்களமேடு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை வைத்து அடையாளம் காண தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல, சர்க்கரை ஆலை எறையூர் கிராமத்தில், ஒரு வீட்டில் முக்கால் பவுன் நகையும், மற்றொரு வீட்டில் 1.5 பவுன் நகையையும் கொள்ளையர்கள் களவாடி சென்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!