Rota virus drops introductory meeting in Perambalur district
ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து அறிமுகத்திற்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே மிதமான மற்றும் கடுமையான வயிற்றுப்போக்குகளில் 40 சதவீதம் ரோட்டோ வைரஸ் கிருமித்தொற்றினால் ஏற்படுகின்றது. அதன்படி, வயிற்றுப்போக்கின் தாக்கத்தால் இறப்பின் விகிதத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகவும் அவசியம்.
ரோட்டோ வைரஸ் மற்றும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பு மருந்துகள் அளித்தல், தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தில் சுகாதாரம் பேணுதல், தாய்ப்பால் அளிப்பதை ஊக்குவித்தல், குழந்தைக்கு உணவு ஊட்டுவதை தொடா;ந்து அளித்தல் மற்றும் வைட்டமின் ‘ஏ’ திரவம் அளித்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகள் அளித்தல் மற்றும் துத்தநாக மாத்திரையை அளித்தல் ஆகிய சிகிச்சை முறைகளை பின்பற்றுதல் அவசியம்.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ஒன்றரை மாதத்திலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளாக இரண்டரை மற்றும் மூன்றரை மாதத்திலும் வழங்கப்படும்.
ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து தனியாரில் பெற சுமாh; ரூ.3000- வரை செலவு செய்யும் நிலையில் தமிழக அரசு எவ்வித கட்டணமும் இல்லாமல் குழந்தைகளுக்கு ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்துகள் தர வழிவகை செய்துள்ளது. இத்தகைய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி குழந்தைகளை ரோட்டோ வைரஸ் வயிற்றுப்போக்கு மற்றும் அதன் பின் விளைவுகள் ஏற்படாமல் காத்திட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்றிட பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தமிழகத்திலேயே திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்றிட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் மற்றும் அரசு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.