Rs. 1.5 crore fraud with fake gold jewelery Two of the corporate bank managers arrested

போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.1.5 கோடி மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட் பேங்க் மேனேஜனர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பிலிக்கல்பாளையம், மல்லிகாபுரத்தில் தனியார் கார்பரேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அந்த கிளையில், ஈரோடு மண்டல மேலாளர் வினோத் சந்திரன் கடந்த 23ம்தேதி வங்கி ஆவணங்களையும், நகைகளையும் தணிக்கை செய்தார். அப்போது வங்கியில் பணிபுரிந்த நகைமதிப்பீட்டாளர் பொத்தனூர் நாவல் நகர் ராஜேந்திரன் என்பவர், நகைக் கடன் பெறவரும் வாடிக்கையாளர்களின் பெயர்களில் போலியான நகைகளை அடகு வைத்து ரூ.ஒரு கோடியே 56 லட்சத்து 75 ஆயிரத்து 115 பணத்தை பேங்கின் துணை மேலாளர் கரூர் வடக்கு காந்திகிராமம் வாசுதேவன் மற்றும் பேங்க் கிளை மேலாளர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி சுரேஷ் ஆகியோர்களுடன் சேர்ந்து உள்ளூர் வாடிக்கையாளர்களின் பெயரில் கவரிங் நகைகளை அடகு வைத்து வங்கியை ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 26ம் தேதி வங்கியின் ஈரோடு மண்டல மேலாளர் வினோத் சந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பிஅருளரசு உத்தரவின்பேரில் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு புலன் விசாரணையில் தனியார் கார்பரேட் வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளர் ராஜேந்திரன் உள்ளுரில் பல வாடிக்கையாளர்களை தன் கைக்குள் வைத்துக்கொண்டு கவரிங் நகைகளை அவர்கள் பெயரில் வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்று பல தொழில்களில் பணத்தை முதலீடு செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் கடந்த ஜனவரி 5 ம் தேதி வங்கி மண்டல அலுவலகத்தில் இருந்து வந்த நகை மதிப்பீட்டாளர் சோதனையின் போது லாக்கரில் இருந்த கவரிங் நகைகளை மாற்றி வைத்து சோதனைக்கு கொடுத்ததாகவும், மீண்டும் கடந்த 19ம் தேதி தணிக்கை செய்தபோது போலி நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி கிளை மேலாளர் மற்றும் உதவி மேலாளரை கைது செய்து ரீமாண்ட் காவலில் அனுப்பப்பட்டனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான வங்கி நகை மதிப்பீட்டாளர் தியாகராஜனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த குற்றப்பிரிவு டிஎஸ்பி மணிமாறன், இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் தனிப்படையினரை நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு பாராட்டினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!