Rs 1.5 lakh in plea to robbery, break in succession 3 stores in Perambalur: Unidentified persons tampering


பெரம்பலூர்.நவ.4- பெரம்பலூர் நகரில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அள்ளி சென்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள பனங்கூர் கிராமத்ததை சேர்ந்தவர் சவுந்திரவேலு (வயது 35), இவர் பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியில் எலக்ட்ரீகல் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு, வியாபாரம் செய்த பணத்தை கல்லாப்பெட்டியில் வைத்து சென்று விட்டார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் ஒன்று எலக்ட்ரீகல் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.25 ஆயிரத்தை கொள்ளையிட்டனர்.

இதனிடையே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் எலக்ட்ரீக்கல் கடை வாசலில் நிற்பதை பார்த்து அப்பகுதி பொது மக்கள் சத்தம் போட்டுள்ளனர்.

பொது மக்களின் சத்தம் கேட்டதும், திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானது.

இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து கைரேகையை கைப்பற்றினர்.

மேலும் சங்கு பேட்டை பகுதியில் காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளை கும்பலை அடையாளம் காண முயற்சியில்
ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று , பெரம்பலூர் நகரில் உள்ள கல்யாண் நகரில் உள்ளி காய்கறி விற்பனை கடையில் கதிரவன் என்பவர் வைத்திருந்த ரூ. 22ஆயிரம், அதற்கு அருகில் உள்ள மெடிக்கல் கடையில் சிவவங்கர் என்பவர் வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்தை கொள்ளையர் எடுத்து சென்றனர்.

பெரம்பலூரின் நகரின் மையப்பகுதியில் நிகழ்ந்த கொள்ளை முயற்சி சம்பவம் வியபாரிகள் உள்ளிட்ட பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை சார்பில் வணிகர்கள் கடைகளில் பணம் வைத்து விட்டு செல்லக்கூடாது என்றும், வணிகர்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமரா வைத்துக் கொள்ளவும் அறிவிப்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!