Rs 1.80 lakh stolen by breaking the lock of the side doors of 2 shops in Perambalur!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைத்திற்கும், 4 ரோடு இணைப்பு சாலைக்கும் இடையில் உள்ள சூப்பர் மார்க்கட் மற்றும் குழந்தைகள் பொருட்கள் விற்கும் கடையில் இன்று காலையில் வந்து பணியாளர்கள் வந்து பார்த்த போது, கடைகளின் பக்கவாட்டு கிரில் கேட்டுகளை உடைத்து, சூப்பர் மார்க்கட் கடையில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரமும், மற்றொரு கடைகயில் ரூ. 5 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதும், கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களிக் டி.வி.ஆரையும் எடுத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.