Rs. 1 crore worth of Works; Namakkal South Government Higher Secondary School Donors Honorary Festival

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125ஆவது ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் புதுப்பித்தல், பள்ளிக் கட்டடம் மற்றும் சத்துணவுக் கூடம் சீரமைத்தல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதையொட்டி, நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா பள்ளி கலைரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்எல்ஏவும், பள்ளியின் 125ஆது ஆண்டு அறக்கட்டளைத் தலைவருமான பாஸ்கர் தலைமை வகித்தார். செயலர் கணபதி வரவேற்றார். தொழிலதிபர் முருகேசன் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அறக்கட்டளை உப தலைவர்கள் ரங்கநாதன், மோகன், இணைச் செயலர்கள் நடராஜன், பாலுமணி, பொருளாளர் அபுபக்கர் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில், பள்ளித் தலைமை ஆசிரியர் கேசவன் நன்றி கூறினார்.