Rs. 1000 crores, Rail route project through Thuraiyur: Perambalur constituency candidate Parivendar confirmed in vote collection!
பெரம்பலூர் பாராளுமன்ற கூட்டணி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் சோபனாபுரம் பகுதியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது : 1000-கோடி ரூபாய் திட்டத்தில் அரியலூர் பெரம்பலூர் துறையூர் நாமக்கல் வழியாக ரயில் வழி தடதிற்க்கு திட்டம் வரையறுக்கபட்டுள்ளதாகவும், வரும் 2024 ம் ஆண்டு பட்ஜட் கூட்ட தொடரில் நிதி ஒதுக்கப்படும் என்று இரயில்வே அமைச்சர் உறுதி கூறி உள்ளதாக பாரிவேந்தர் மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
மேலும் 1200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கியாதாகவும் இந்த முறை எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் 1500-குடும்பங்களுக்கு ரூ.10-லட்சம் மதிப்பிலான உயர் மருத்துவ சிக்கிச்சை இலவசமாக வழங்குவதாக கூறினார்.
மேலும், 70 அமைச்சர்கள் உள்ள மோடி அமைச்சரவையில் ஒரு வருவர் கூட ஊழல் செய்யவில்லை என்றும், ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்றும், ஒரு சிலர் உள்ளே சென்றுள்ளார்கள் என்றும், இன்னும் சிறிது காலத்திற்குள் அனைவரும் உள்ளே செல்வார்கள் என்றும், கூறினார். எனவே, மறந்தும் சூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என்றும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.
பிரச்சாரத்தில் ஐ.ஜே.கே பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்யநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சபா ராஜேந்திரன், கடலூர் மண்டல தலைவர் தர்மலிங்கம், திருச்சி வடக்கு மாவட்ட இணை செயலாளர் பாஸ்கர், திருச்சி மாவட்ட தலைவர் பழனிசாமி, திருச்சி வடக்கு மாவட்ட துணை தலைவர் ராஜ், துணை செயலாளர் நல்லசாமி விஜயன் மற்றும் பாஜக, பாமக, அ மு மு க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.