Rs. 1000 for each house! If not, vote for it!! Private college staff survey! Election Commission officials investigation!
பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கான தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தீவிரமாக பணி செய்து வருகின்றனர்.
மேலும், பெரம்பலூர் தொகுதி எம்பியாக வெற்றி பெற்றால், அதிர்ஷ்ட்டம் இருந்து மத்திய அமைச்சரானால் நல்ல நிலை உண்டு, இல்லை எனில், எம்.பி-க்கு, எம்.எல்.ஏ வை விட குறைந்த நிதியே மத்திய அரசு வழங்கும். அதோடு, நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமைக்கு குரல் எழுப்பலாம். எம்.பி ஆவதன் மூலம், தன்னையும், தனக்கு வாக்களித்த தொகுதி மக்களையும் வளர்த்து விட முடியும்.
இதற்காக, வெற்றி வாகை சூட நினைக்கும் அரசியல் கட்சிகள், அனைத்து விதமான திறமைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். தனியார் கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் அரசியல் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுவீடாக சென்று, வீட்டில் எத்தனை ஓட்டு உள்ளது என்றும், அப்பகுதிவாசிகளை வைத்து, அவர்கள், எந்த கட்சியை சேர்ந்தவர் என்றும். தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.
பெரம்பலூரில் உள்ள ஆளும்கட்சியின் ஆதரவு பெற்ற கல்லூரி நிறுவனம் ஒன்று விசுவாசத்தை நிரூபிக்கவும், மாவட்ட செயலாளர் பதவி பெறவும், தனது பணியாளர்களை களத்தில் இறக்கி விட்டு பணி செய்ய செய்துள்ளது. நிர்வாகத்தின் உத்தரவை மீற முடியாத பல பணியாளர்கள், வீடு வீடாக தகவல் சேகரித்து வருகின்றனர்.
இதில், வெற்றியை பெற, எதிர்கட்சியை சேர்ந்தவர்களுக்கும், பணம் பட்டுவாடா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1000 கொடுக்கலாமா?, இல்லை ஒவ்வொரு வாக்களர்க்கும் ரூ. ஆயிரம் கொடுக்கலாமா? என்றும் தீவிர அலசலில் உள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில், ஊழியர்கள் கணெக்கெடுப்பாதாக வந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு தேர்தல் அலுவலர் சுகுணா தலைமையில் சென்ற பறக்கும் படையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்களிக்க பணம் கொடுப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் பணியில் ஈடுபட்டுள்னர்.