Rs. 11.15 Crore projects: Minister Sivashankar inaugurated in Perambalur District!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களில் இன்று சுமார் ரூ. 11 கோடியே 15 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர் இன்று கலெக்டர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்தார்.


இதில், மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவருமான சி.ராஜேந்திரன் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணிலடங்கா திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள்.

அதனடிப்படையில், இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜெமின்பேரையூர் முதல் அருணகிரிமங்கலம் இடையே கிராம சாலை திட்டத்தின் கீழ் மருதையாற்றின் குறுக்கே ரூ.725.00 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணியினையும், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாத்தனூர் முதல் கொட்டறை வரை ரூ.91.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.39.00 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணியினையும் துவக்கி வைத்துள்ளோம்.

அதனை தொடர்ந்து வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கரம்பியம் ஊராட்சியில் உள்ள சின்ன ஏரியில் ரூ.08.28 லட்சம் மதிப்பீட்டில் ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் படித்துரை அமைக்கும் பணியினையும், பெரியம்மாபாளையம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ள தெருவில் ரூ.09.75 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.03.00 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை அமைக்கும் பணியினையும், பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.05.90 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கழிவறை அமைக்கும் பணியினையும், ரூ.09.10 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சின்னவெண்மணி ஊராட்சி கிழக்கு தெருவில் ரூ.06.34 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வாய்கால் அமைக்கும் பணியினையும், சின்ன வெண்மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.05.90 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை அமைக்கும் பணியினையும், பெரிய வெண்மணி சின்ன தெருவில் ரூ.06.30 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், புதுக்குடிசை கிராமத்தில் கிழக்கு தெருவில் ரூ.02.75 லட்சம் மதிப்பீட்டில் பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணியினையும், கொத்தவாசல் பள்ளிக்கு செல்லும் சாலையில் ரூ.06.77 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், கொத்தவாசல் திருக்குளத்தில் ரூ.13.80 லட்சம் மதிப்பீட்டில் படித்துரை மற்றும் ஆழப்படுத்துதல் பணியினையும், கொத்தவாசல் ஊராட்சியில் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கொத்தவாசல் முதல் சுப்புராயபுரம் வரை ரூ.48.17 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும், நல்லறிக்கையில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நல்லறிக்கை முதல் துனிஞ்சப்பாடி ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளும், நல்லறிக்கை ஜெ.ஜெ.எம் திட்டத்தின் கீழ் ரூ.21.20 லட்சம் மதிப்பீட்டில் காடுர் உயர்மட்ட குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பின்பு புதுவேட்டக்குடியில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுவேட்டக்குடி காலனி முதல் புதூர் வரை ரூ.96.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் 11.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுவேட்டக்குடியில் முழுநேர புதிய நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிமைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் ஏழை எளிய அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்கள் தொடர்ந்து மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

புதிய வழித்தடத்தில் பேருந்து:

அரியலூர் முதல் திட்டக்குடி வழித்தடத்தில் புதுவேட்டக்குடியிலிருந்து 2.கி.மீ தொலைவில் உள்ள காடூர் கிராமத்தினை தொட்டு செல்லும் வகையில் நகரப் பேருந்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்து, அதே பேருந்தில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்து, புதுவேட்டக்குடியில் இறங்கி கார்களில் மாறிக் கொண்டனர்.

வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாநிதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட அரசு பணியாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!